2,612 பேர் பாடம் வாரியாக சதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவ, மாணவியர் 2,612 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடம் வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவ, மாணவியர் 2,612 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடம் வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 97.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் யாரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறவில்லை. இருப்பினும், பாடம் வாரியாக 2,612 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கணிதத்தில் 307 பேரும், அறிவியல் பாடத்தில் 552 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 1753 பேருமாக மொத்தம் 2612 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
தேர்ச்சி பெறாதவர்கள்: இதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் தமிழ் பாடத்தில் 458 பேரும், ஆங்கிலத்தில் 153 பேரும், கணிதத்தில் 75 பேரும், அறிவியலில் 24 பேரும், சமூக அறிவியலில் 9 பேரும் தேர்ச்சி பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com