44 அரசுப் பள்ளிகள் உள்பட 157 பள்ளிகள் 100% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 44 அரசுப் பள்ளிகள் உள்பட 157 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 44 அரசுப் பள்ளிகள் உள்பட 157 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 294 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 84 அரசுப் பள்ளிகள் அடங்கும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 44 அரசுப் பள்ளிகளும், 113 தனியார் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டை விட 7 அரசுப் பள்ளிகள் கூடுதலாக 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன.
சாதித்த அரசுப் பள்ளிகள்: தூத்துக்குடியில் சிவஞானபுரம், தருவைக்குளம், ராமானுஜம்புதூர், சாமுவேல்புரம், மேல்மாந்தை அரசுப் பள்ளிகள், வானரமுட்டி, வேம்பார், செஞ்சோட்டை, வேப்பலோடை, நாலாட்டின்புதூர் கேஆர்எஸ், எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டுப் பள்ளி, காடல்குடி, காலம்பட்டி, கோடாங்கிப்பட்டி, கொல்லங்கிணறு, படர்ந்தபுளி, பரவல்லிக்கோட்டை, வெம்பூர், விஜயாபுரி, சிதம்பரம்பட்டி, கோவில்பட்டி, காந்திநகர் நகராட்சி மற்றும் லட்சுமி மில் காலனி, வடக்கு இலந்தைகுளம், வேடநத்தம், சென்னமரெட்டிப்பட்டி பிவிகேஎஸ், கோவில்பட்டி, படுக்கப்பத்து, வாழவல்லான், கீழபூவாணி, ஆத்தூர், சிவகளை, கொங்கராயக்குறிச்சி, காயாமொழி எஸ்பி. ஆதித்தனார், கொம்மடிக்கோட்டை எஸ்எஸ்என், நடுநாலுமூலைக்கிணறு, கால்வாய், காசிலிங்கபுரம், வெங்கட்ராமானுஜபுரம், அணவரதநல்லூர், சுண்டன்கோட்டை, பொட்டல்காடு, பன்னம்பாறை, புதுக்குளம், கொம்பன்குளம், தேரிக்குடியிருப்பு பி.கே. ஆகிய 44 அரசுப் பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com