கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 22 அரசுப் பள்ளிகள் உள்பட 56 பள்ளிகள் 100% தேர்ச்சி

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 22 அரசுப் பள்ளிகள் உள்பட 56 பள்ளிகள்  பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 22 அரசுப் பள்ளிகள் உள்பட 56 பள்ளிகள்  பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 45 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 118 பள்ளிகள் உள்ளன. இதில் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 22 அரசுப் பள்ளிகளும், ஒரு நகராட்சிப் பள்ளி, 12 அரசு உதவி பெறும் பள்ளி, 21 மெட்ரிக் பள்ளி என 56 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
இந்த கல்வி மாவட்டத்தில் 4,542 மாணவர்கள், 4,657 மாணவிகள் என மொத்தம் 9,199  பேர் தேர்வு எழுதினர். இதில் 4,314 மாணவர்களும், 4,546 மாணவிகளுமாக மொத்தம் 8,860 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி விகிதம் 96.31 சதவீதமாகும்.
அரசு உதவி பெறும் பள்ளிகள்:  கழுகுமலை கம்மவார் (மகளிர்), பேரிலோவன்பட்டி டி.வி.ஏ. நல்லழகு நாடார், கீழமுடிமண் செயின்ட் ஜோசப், கீழவைப்பாறு செயின்ட் லூயிஸ், கழுகுமலை செயின்ட் லூஸியா, கோவில்பட்டியில் வேலாயுதபுரம் ஈ.வே.அ.வள்ளிமுத்து, இலக்குமி ஆலை, சோழபுரம் இந்து நாடார், கயத்தாறு ஆர்.சி. பாத்திமா, காமநாயக்கன்பட்டி செயின்ட் அலாய்சியஸ், பெரியசாமிபுரம் செயின்ட் அந்தோணி, நாகலாபுரம் டி.டி.டி.ஏ. ஜெயராஜ் அன்னபாக்கியம் ஆகிய பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மெட்ரிக் பள்ளிகள்: கயத்தாறு பாபா, குமரகிரி சி.கே.டி., கோவில்பட்டி கவுணியன், ஜான்போஸ்கோ, காமராஜ், ராவிள்ள கே.ஆர். வித்யாஷ்ரம், செவன்த் டே அட்வன்டிஸ்ட், ஸ்ரீ கண்ணா, செயின்ட் பால்ஸ், கோவில்பட்டி நாடார் காமராஜ், லட்சுமி சீனிவாசா வித்யாலயா, மகரிஷி வித்யாஷ்ரம், நாகலாபுரம் சீனி, விளாத்திகுளம் வில்மரத்துப்பட்டி சாரோன், புதியம்புத்தூர் மகாத்மா, கயத்தாறு அன்னை தெரசா, கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட், சிந்தலக்கரை எஸ்.ஆர்.எம்.எஸ்., கழுகுமலை விமல், வேம்பார் செயின்ட் மேரீஸ், கீழஈரால் ஆக்ஸிலியம் ஆகிய 21 மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com