மாவட்டத்தில் 14 மையங்களில் நாளை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு

தூத்துக்குடியில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 21) 14 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 21) 14 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
 இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 2017ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்) சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடியில் 14 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 21) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுத ஆண், பெண் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த மொத்தம் 16,332 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பள்ளிகள், தேர்வுக்கூட எண்  விவரம்: தூத்துக்குடி மில்லர்புரம் வஉசி கல்லூரி: 3100001- 3102197; பிஎம்சி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி: 3102198-3104298; முள்ளக்காடு சாண்டி பாலிடெக்னிக் கல்லூரி: 3104299-3105877; அண்ணா பல்கலைக்கழக வஉசி பொறியியல் கல்லூரி: 3105878- 3107452; புனித மரியன்னை மகளிர் கல்லூரி: 3107453- 3108832; சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி: 8101120- 8102762; காமராஜ் கல்லூரி: 3108833- 3109886; புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி: 3109987- 3110958.
 கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி: 3110959- 3112039; காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி: 3112040- 3113121; புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி: 3113122- 3114002; ஸ்பிக்நகர் மேல்நிலைப் பள்ளி: 3114003- 3114376 மற்றும் 810001- 8100671; கமாக் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி: 8100393- 8101119; கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி: 8102763- 8103035.
தேர்வுக்கூட அனுமதி கடிதத்தை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய குழும  இணயதள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்பு கடிதத்துடன் தேர்வு மையத்தில் காலை 9 மணிக்கு முன்பு ஆஜராக வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com