வடக்கு வண்டானம் சவேரியார் ஆலயத் திருவிழா இன்று தொடக்கம்

கோவில்பட்டியையடுத்த வடக்கு வண்டானம் தூய சவேரியார் ஆலயத்தில் 120ஆவது ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை (நவ.24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

கோவில்பட்டியையடுத்த வடக்கு வண்டானம் தூய சவேரியார் ஆலயத்தில் 120ஆவது ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை (நவ.24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
ஜவஹர் நகர் பங்கு பணியாளர் அருள்அம்புரோஸ், கயத்தாறு பங்கு பணியாளர் அலாய்சியஸ் துரைராஜ், பாளை ஆயர் இல்லம் சகாயபவுல், புளியம்பட்டி உதவி பங்கு பணியாளர் மிக்கேல், காமநாயக்கன்பட்டி உதவி பங்கு பணியாளர் அருள் அலெக்ஸாண்டர் ஆகியோர் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.  தொடர்ந்து, திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெறும்.
   விழா நாள்களில் தினமும் இரவு 6.30 மணிக்கு திருஜெபமாலை மற்றும் திருப்பலி நடைபெறும். 9ஆம் திருநாளான டிசம்பர் 2ஆம் தேதி இரவு  7 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். 10ஆம் நாளான டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலை 4.30  மணிக்கு தேரடித் திருப்பலியும், காலை 9 மணிக்கு நன்றி திருப்பலி,  பகல் 12 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி ஆகியன நடைபெறுகின்றன. 
ஏற்பாடுகளை ஆலய பங்குத் தந்தை தலைமையில், அருள்சகோதரிகள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

ஆறுமுகனேரியில்... 
ஆறுமுகனேரி,நவ.23: ஆறுமுகனேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை(நவ.24)  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழா  டிசம்பர் 3ஆம் தேதி வரை பத்து நாள்ங்கள் நடைபெறுகிறது.
கொடியேற்ற நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறை வட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமை வகிக்கிறார். திருவிழா நாள்களில் தினமும் காலை 5 மணிக்கு திருப்பலி, மாலை 6.30க்கு நற்கருனை ஆசீர் மற்றும் மறையுரை நடைபெறும். 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு தூத்துக்குடி திருச்சிலுவை நாதர் நற்செய்தி குழு சார்பில் நற்செய்தி பெருவிழா நடைபெறும். டிசம்பர் 2ஆம் தேதி மாலை 6.30க்கு தஞ்சாவூர் குரு மட அதிபர் அகஸ்டின் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது. டிசம்பர் 3ஆம் தேதி காலை 7 மணிக்கு பாளையங் கோட்டை மறை மாவட்ட முதன்மை குரு டெரன்ஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும். மாலை 6.30க்கு புனித சவேரியார் கப்பல் பவனி நடைபெறும். 4ஆம் தேதி அசனம் நடைபெறுகிறது.ஏற்பாடுகளைபங்குத்தந்தை ஸ்டார்வின் அடிகளார், ஊர்கமிட்டி தலைவர் அமிர்தம் பர்ணாந்து மற்றும் ஊர்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com