பூவுடையார்புரம் கோயிலில் கொடை விழா

சாத்தான்குளம்  அருகேயுள்ள பூவுடையார்புரம்  அருள்மிகு முத்தாரம்மன் கோயில் புரட்டாசி கொடை விழா அக். 1ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை  (5ஆம்தேதி) வரை 5 நாள்கள் நடைபெற்றது.

சாத்தான்குளம்  அருகேயுள்ள பூவுடையார்புரம்  அருள்மிகு முத்தாரம்மன் கோயில் புரட்டாசி கொடை விழா அக். 1ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை  (5ஆம்தேதி) வரை 5 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் மாலை 6 மணிக்கு செல்வவிநாயருக்கு சிறப்பு அபிஷேகம், 7மணிக்கு குருபூஜை, 2ஆம் நாள் காலை 6மணிக்கு முத்தாரம்மனுக்கு கும்பாபிஷேகம், பகல் 12மணிக்கு சிறப்பு பூஜை, 3ஆம் நாள் காலை 9மணிக்கு செல்வவிநாயகர் கோயிலிலில் இருந்து 108 பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் வருதல், பிற்பகல் 1மணிக்கு அம்பாள் மஞ்சள் நீராடுதல், இரவு 7மணிக்கு பெண்கள் மஞ்சள் பெட்டி எடுத்து பவனி வருதல், 4ஆம் நாள் காலை 9 மணிக்கு அம்பாளுக்கு 10008 புஷ்பாஞ்சலிலி, பிற்பகல் 2 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேக பூஜை, இரவு 7மணிக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து  ஊர்வலமாக வருதல், நள்ளிரவு 1 மணிக்கு சந்தன அலங்கார பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் கோயில் தர்மகர்த்தா ஆதிலிலிங்கராஜ், இந்து முன்னணி மாநிலச் செயலர் டாக்டர் த.அரசுராஜா, மாவட்ட கூடுதல்  காவல்  கண்காணிப்பாளர் கந்தசாமி, தட்டார்மடம்  காவல் ஆய்வாளர் பொன்னுச்சாமி, மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலர் சக்திவேலன், மாவட்ட பாஜக துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய இந்து முன்னணி பொதுச் செயலர் முத்துலிலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவு நாளான  வியாழக்கிழமை காலை 9மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7மணிக்கு சிறுவர், சிறுமிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ஆதிலிலிங்கராஜ் தலைமையில் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com