செல்வ மாதா ஆலயத் திருவிழா தொடக்கம்

கோவில்பட்டி புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  

கோவில்பட்டி புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  
இந்த ஆலயத் திருவிழாவையொட்டி  மாலை 6 மணிக்கு நவநாள் ஜெபம் நடைபெற்றது.   பாளை மறை மாவட்ட வட்டார அதிபர்  அலாய்சியஸ் துரைராஜ் கொடியேற்றி வைத்தார்.   தூத்துக்குடி இளம்குருமட அதிபர் மரிய அந்தோணி,  நாலாட்டின்புத்தூர் எஸ்.எப்.எஸ். மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி முதல்வர் அமிர்தராஜன், கோவில்பட்டி ஆலய பங்குத்தந்தை பீட்டர்,  உதவி பங்குத்தந்தை ஜேம்ஸ் ஸ்டாலின்,   தீபக் ஆகியோர் இணைந்து,  ஒற்றுமையின் உறைவிடம் திருக்குடும்பம் எனும் மறையுரையுடன் திருப்பலி நிறைவேற்றினர்.
சனிக்கிழமை  மாலை 6 மணிக்கு நவநாள் ஜெபமும், தொடர்ந்து திருப்பலி மற்றும் நற்செய்தி பெருவிழா நடைபெறும்.  3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (அக்.15) மாலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி,  தொடர்ந்து நற்கருணை ஆசீர் மற்றும் பரிசுத்த செல்வமாதா திருவுருவ பவனி நடைபெறும்.  
நிகழ்ச்சியில்,  புதுக்கிராமம் பகுதி இறைக்கள்,  அமலவை அருள்சகோதரிகள்,  பங்கு பேரவையினர்,  அன்பியங்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com