அக்.6இல் மேல்நிலை வகுப்புகளுக்கு கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி

கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மேல்நிலை வகுப்பு மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மேல்நிலை வகுப்பு மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர், மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளித் தலைமையாசிரியரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து, அதில் அவரது கையொப்பம் பெற வேண்டும். பின்னர், போட்டி நடைபெறும் இடத்துக்கு 6ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்று வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடவேண்டும்.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7000, மூன்றாம் பரிசாக ரூ. 5000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்கள் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com