மண்டல விளையாட்டு போட்டி: காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி சாதனை

திருநெல்வேலி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

திருநெல்வேலி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவ- மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று திறன்களை வெளிப்படுத்தினர். டேபிள் டென்னிஸ் 17 வயது ஒற்றையர், இரட்டையர் பிரிவில் ராஜ் சுந்தர், கிப்ட்சன் சுஜித் முதலிடம், 19 வயது ஒற்றையர் போட்டியில் அஃப்ரúஷ் பாபு இரண்டாம் இடம், சிலம்பம் 19 வயது பிரிவில் முத்து சண்முக சாருக், பிரகாஷ் முதலிடம் பெற்றனர்.
14 வயது மாணவியர் பிரிவில் முத்து இசை ராதா முதலிடம், கேரம் போட்டியில் 14 வயது பிரிவில் முகிலன், கிருத்திகேஷ் ஆதித்தன் முதலிடம், 19 வயது பிரிவில் தியாகேஷ், அபிஷேக் மூன்றாமிடம், 17 வயது ஒற்றையர் பிரிவு கேரம் போட்டியில் கணேசன் மூன்றாம் இடம் பெற்றனர்.
வள்ளியூர் கிங்ஸ் பள்ளியில் நடைபெற்ற தடகளத்தில், 14 வயது மாணவி பிரிவில் ஸ்கைலா 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், தடைதாண்டுதல் போட்டிகளில் இரண்டாம் இடமும், 4 ல 100 மீட்டர் ஓட்டத்தில் ஸ்கைலா, ஹெர்சல், டஃப்னி, பவானி இரண்டாம் இடமும் பிடித்தனர்.
14 வயது மாணவர் பிரிவில் மதன் வெங்கடேஷ் குண்டு எறிதலில் மூன்றாம் இடமும், வட்டு எறிதலில் இரண்டாம் இடமும், 19 வயது பிரிவில் முகமது மீரான் மாயிஸ் வட்டு எறிதலில் இரண்டாம் இடமும், அஜெய் கிருஷ்ணன் நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடமும், தடை தாண்டுதலில் இரண்டாம் இடமும் பெற்றார்.
சதுரங்கப் போட்டியில் 11 வயது பிரிவில் பூஜா மூன்றாம் இடத்தையும், 17 வயது மாணவி பிரிவில் தனிஷட் ராம் ஜோதி முதலிடமும், 19 வயது பிரிவில் எழில் ஓவியா இரண்டாம் இடமும், 17 வயது மாணவர்கள் பிரிவில் சக்தி விஷட்ல் முதலிடமும், 19 வயது பிரிவில் மிதுன் ஆனந்த் முதலிடமும் பெற்றனர். இவர்கள் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர். அதில், சக்தி விஷட்ல் வெள்ளி பதக்கம் பெற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாணவ, மாணவியரை பள்ளியின் தாளாளர் அ.ராமமூர்த்தி முதல்வர் இரா.செல்வ வைஷ்ணவி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com