தூத்துக்குடியில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தூத்துக்குடியில் சிஐடியூ அமைப்பு சார்பில் திங்கள்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தூத்துக்குடியில் சிஐடியூ அமைப்பு சார்பில் திங்கள்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 18 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) சார்பில் தூத்துக்குடியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். மாநிலச் செயலர் ஆர். ரசல் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது,  "அனைத்து தொழிலாளர்களுக்கும் 30 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.18 ஆயிரம் மாத ஊதியம் வழங்க வேண்டும்", என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்,மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com