ஏப். 27இல் மீன்பதன தொழில்முனைவோருக்கான  திறன் மேம்பாட்டு பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஏப். 27ஆம் தேதி மீன் பதன தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெறுகிறது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஏப். 27ஆம் தேதி மீன் பதன தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெறுகிறது.
 இதுகுறித்து மீன்வளக் கல்லூரி முதல்வர் கோ. சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்பதனத் தொழில்நுட்பத் துறையின் மூலம் "மீன்பதன தொழில்முனைவோருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி' குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் ஏப். 27ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியின்போது, மீன் தொழிலுக்கான வாய்ப்புகள் மற்றும் மீன்பதனத்தைக் கையாளுவதற்கான பல்வேறு திறமைகளை மேம்படுத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியின் மூலம் மீன் தொழிலில் ஏற்படும் சாதக மற்றும் பாதக நிகழ்வுகள் குறித்தும்,  வாய்ப்புகள் மற்றும் பிரச்னைகள் குறித்தும் அறிந்துகொண்டு மீன்தொழிலில் வெற்றியாளராக திகழலாம். 
பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ. 300 செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் ஏப். 26ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 0461-2340554 என்ற தொலைபேசி எண்ணிலும், 77087 62554 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com