பொருள்களை விட்டுக்கொடுத்தல் திட்டம்:  குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிமுகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்களை விட்டுக்கொடுத்தல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்களை விட்டுக்கொடுத்தல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 4 லட்சத்து 71 ஆயிரத்து 857 மின்னணு குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன.  அந்தக் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி இலவசமாகவும்,  சீனி,  பருப்பு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவை மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.
குடும்ப அட்டை வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் அரிசி, பருப்பு, சீனி, பாமாயில் போன்ற பொருள்களை நியாய விலைக் கடைகளுக்கு சென்று வாங்குவது இல்லை.  அவ்வாறு வாங்காத பொருள்களை போலிப் பட்டியல் மூலம் விற்பனை செய்ய முயல்வதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.
 அதை தவிர்க்க,  உணவுப்பொருள் வழங்கல் துறை விட்டுக் கொடுத்தல் என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 
இந்தத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர் அரிசி, சீனி, பருப்பு, பாமாயில், கோதுமை  ஆகிய உணவுப் பொருள்கள் தங்களுக்கு தேவை இல்லை எனக் கருதினாலோ,  அல்லது சில மாதங்களுக்கு மட்டும் தேவை இல்லை என்றாலோ அல்லது சில பொருள்கள் தேவையில்லை எனக் கருதினாலும் இந்தத் திட்டத்தின் மூலம் பொருள்களை விட்டுக் கொடுக்கலாம்.
 விட்டுக் கொடுக்கும் திட்டத்தின் காரணமாக குடும்ப அட்டை ரத்து செய்யப்படமாட்டாது.  மேலும் போலிப் பட்டியல் மூலம் விற்பனை செய்யப்படுவதும் தடுக்கப்படும்.  இதுதவிர எந்தப் பொருளும் தேவை இல்லை எனில் அவர்கள் எப்பொருளும் வேண்டாதோர் அட்டையாகவும் மாற்றிக் கொள்ளலாம்.  
 இது தொடர்பான தகவல் அறிய W​W​W.​T​N​P​D​S.​G​O​V.​IN  என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது T​N​EP​D​S என்ற செல்லிடப்பேசி செயலி மூலமாகவோ அல்லது 9445000370 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com