தூத்துக்குடி தனியார் மீன் பதனிடும் ஆலையில் அமோனியா வாயு வெளியேறியதாக மக்கள் புகார்

தூத்துக்குடியில் தனியார் மீன் பதனிடும் ஆலையில் இருந்து செவ்வாய்க்கிழமை அமோனியா வாயு வெளியேறியதாகவும், இதனால் தங்களுக்கு

தூத்துக்குடியில் தனியார் மீன் பதனிடும் ஆலையில் இருந்து செவ்வாய்க்கிழமை அமோனியா வாயு வெளியேறியதாகவும், இதனால் தங்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் தனியார் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இங்கு மீன் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆலையில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் அமோனியா வாயு வெளியேறியதாக அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலையை சுற்றியுள்ள பகுதி மக்கள் சிலர் தங்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி, ஆலை முன் திரண்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, தூத்துக்குடி வட்டாட்சியர் சிவகாமசுந்தரி தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடமும், ஆலை நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொண்டனர்.
மக்கள் குடியிருக்கும் பகுதியில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைந்திருப்பதால், பதப்படுத்தும் தொழிற்சாலையில் இருந்து அடிக்கடி இதுபோன்ற வாயு கசிவு ஏற்பட்டு தங்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com