பெண்ணின் கர்ப்பப் பையில் இருந்த 7 கிலோ கட்டி அகற்றம்

தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்ணின் கர்ப்பப் பையிலிருந்த 7 கிலோ கட்டியை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்ணின் கர்ப்பப் பையிலிருந்த 7 கிலோ கட்டியை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
தூத்துக்குடி அண்ணாநகர் 9 ஆவது தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மனைவி மாரியம்மாள் (51). அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த மாரியம்மாளின் எடையும் நாளுக்கு நாள் அதகரித்ததாம். இதையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை மேற்கொண்டார்.
அப்போது, மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில் மாரியம்மாளின் கர்ப்பப் பையில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அந்தக் கட்டியை அகற்ற முடிவு செய்த மருத்துவர்கள், மாரியம்மாளை கடந்த 5 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, மகப்பேறு மற்றும் பெண்கள் சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் கோமதி தலைமையில், உதவி மருத்துவர்கள் முத்துலட்சுமி, அனிதா, சரவணராஜா, மயக்கவியல் மருத்துவர் முத்துசெல்வம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கடந்த 9 ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். வெற்றிகரமாக நடைபெற்ற இந்த அறுவைச்சிகிச்சையின்போது, மாரியம்மாளின் கர்ப்பப் பையில் இருந்த 7 கிலோ நீர்க்கட்டி அகற்றப்பட்டது. தற்போது, மாரியம்மாள் நலமாக உள்ளதாக மருத்துவமனை பொறுப்பு முதன்மையர் கனி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com