தூத்துக்குடியில் கல்வி நிலையங்கள்,  அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா

தூத்துக்குடியில் உள்ள கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில்,  காமராஜர் சிலை முன் வகுப்பு வாரியாக 54 பானைகளில் மாணவர், மாணவிகள் பொங்கலிட்டு சமத்துவப் பொங்கல் கொண்டாடினர்.
இதையொட்டி நடைபெற்ற கபடிப் போட்டியில் சுயநிதி பாடப்பிரிவு வணிகவியல்துறை மாணவர்கள் முதல் பரிசையும், பொருளியல்துறை மாணவர்கள் இரண்டாம் பரிசையும் பெற்றனர். தொடர்ந்து கபடி மற்றும் ரங்கோலி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் து. நாகராஜன் பரிசுகளை வழங்கினார்.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில், நிறுவனர் சுகேஷ் சாமுவேல் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், வள்ளிநாயகம், அந்தோணி பட்டுராஜ், டி.எம். ராஜா மற்றும் மாணவர், மாணவிகள் கலந்துகொண்டு பொங்கலிட்டனர். கோரம்பள்ளத்தில் உள்ள ஸ்காட் குழுமத்தின் குட்ஷெப்பர்ட் மாடல் பள்ளியில் பள்ளி முதல்வர் பத்மினி வள்ளி தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. 
தூத்துக்குடி 3ஆவது மைல் பகுதியில் உள்ள சக்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா பள்ளி நிறுவனர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் ஜெயா சண்முகம் குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவர், மாணவிகள் பொங்கலிட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற விழாவுக்கு,  வங்கித் தலைவர் பிடிஆர். ராஜகோபால் தலைமை வகித்தார். மேலாண்மை இயக்குநர் லட்சுமி முன்னிலையில், முதன்மை வருவாய் அலுவலர் சண்முகம், பொதுமேலாளர் காந்திமதிநாதன் மற்றும் ஊழியர்கள் பொங்கலிட்டனர்.
தூத்துக்குடியில் உள்ள அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையர் ரோஜாலி சுமேதா தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. முதன்மை எழுத்தர் மாரியம்மாள்,  சிவன் கோயில் நிர்வாக அதிகாரி அஜித் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com