கல்வி மாவட்ட பண்பாட்டுப் போட்டி பரிசளிப்பு

கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டி மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டி மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
சுவாமி விவேகானந்தரின் 155ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு விவேகானந்தா கேந்திரம் கோவில்பட்டி கிளை சார்பில் கல்வி மாவட்ட அளவிலான கிராமப்புற பண்பாட்டுப் போட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவையொட்டி, சுவாமி விவேகானந்தரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேச்சு, இசை, நினைவாற்றல் சோதனை, ஒப்பித்தல், விநாடி-வினா, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு, நாடார் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வடிவேல் தலைமை வகித்தார். விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்றத் திட்டச் செயலர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை அன்னதானக் குழு நிர்வாகி நடராஜன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்துப் பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு தொழிலதிபர் நெல்லையப்பன் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், கேந்திர தொண்டர்கள் ஜெயலட்சுமி, கனகாம்பரம், சங்கீதா, மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விவேகானந்தா கேந்திர பொறுப்பாளர் பரமகுரு செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com