கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசல்: எஸ்.பி. ஆய்வு

கோவில்பட்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான சீரமைப்புப் பணிகள் குறித்து காவல் துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 

கோவில்பட்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான சீரமைப்புப் பணிகள் குறித்து காவல் துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
வேம்பார் - பருவக்குடி சாலை விரிவாக்கப் பணிகள், கோவில்பட்டி எட்டயபுரம் சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்ததையடுத்து எட்டயபுரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகேயுள்ள எட்டயபுரம் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவதாகவும், இதை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் செவ்வாய்க்கிழமை எட்டயபுரம் சாலை சந்திப்பில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு தானியங்கி சிக்னல் அமைக்கவும், அதை கண்காணிக்க போக்குவரத்து காவலரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 
மேலும், இளையரசனேந்தல் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சுரங்கப் பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கப்படவுள்ள இடத்தைப் பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர், அங்கு போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்தார். 
மேலும், இலக்குமி ஆலை மேம்பாலம் முதல் ரயில்வே மேம்பாலம் வரை நடைபெறவுள்ள சாலை விரிவாக்கப் பணிகள் குறித்தும், பணிகளின்போது போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எஸ்.பி. கேட்டறிந்தார். பிறகு, இளையரசனேந்தலுக்குச் சென்ற எஸ்.பி., அங்கு கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ், ஆய்வாளர்கள் பவுல்ராஜ் (கிழக்கு), விநாயகம் (மேற்கு), போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுடலைமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com