பங்குனி உத்திரம் திருச்செந்தூர் கோயிலில் மார்ச்30இல் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 30ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 30ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
முருகப்பெருமானுக்கு உகந்த முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழாவும் ஒன்று. நிகழாண்டு பங்குனி உத்திரத் திருவிழா இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி,  திருச்செந்தூர் கோயிலில் அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, 5.30 மணிக்கு அருள்மிகு வள்ளியம்மன் தபசுக்கு புறப்படுதல் நடைபெறும்.
மாலை 4.30 மணிக்கு சுவாமி புறப்பாடு, பந்தல் மண்டபம் முகப்பில், சுவாமி -அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, சுவாமி - அம்மன் திருவீதி வலம் வந்து, இரவு 108 மகாதேவர் சன்னதி முன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவில் இராக்கால அபிஷேகம் நடைபெறாது.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன்,  இணை ஆணையர் பா. பாரதி, அலுவலகக் கண்காணிப்பாளர் யக்ஞ. நாராயணன்,  கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
குன்றுமேலய்யன் சாஸ்தா கோயில்: திருச்செந்தூர் கோயிலின் உபகோயிலான நாலுமூலைக்கிணறு அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com