அய்யா வைகுண்டர் தலைமைப்பதியை கைப்பற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும்: சீமான்

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியை இந்து அறநிலையத் துறை கைப்பற்றும் முயற்சியை கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியை இந்து அறநிலையத் துறை கைப்பற்றும் முயற்சியை கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியை இந்து அறநிலையத் துறை கைப்பற்றும் முயற்சி நடக்கிறது. இந்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறி வருகின்றன. இருப்பினும் தொடர்ந்து அங்கு எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களில் சுத்தமான தண்ணீர் இல்லை. தஞ்சை டெல்டா பகுதி முழுவதும் இன்னும் 5 ஆண்டுகளில் நீரற்ற பகுதியாக உருவாகிவிடும்.
ஸ்டெர்லைட் ஆலையால் நீர், நிலம், காற்று என அனைத்தும் நஞ்சாகி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மக்கள் போராடி வருவதை ஒரு கிராமத்தின் போராட்டமாக கருத முடியாது. இந்த ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும். இதில் நாங்கள் மக்களுடன் துணை நிற்போம்.
மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கொடுக்கும் அழுத்தத்தைப் போல காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com