ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு: மின் இணைப்பு துண்டிப்பு

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பைத்

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பைத் துண்டிக்கவும் அது ஆணையிட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்துக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியுள்ள கடித விவரம்:
தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையானது 2018 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பம் செய்திருந்தது. உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தால், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சட்டத்தின்படி, வாரியத்தின் அனுமதி அல்லது அனுமதி புதுப்பிப்பு இல்லாமல் எந்தவொரு ஆலையும் தனது உற்பத்தியை மேற்கொள்ள முடியாது. இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில், இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, ஆலையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆலையை மூடவும், ஆலைக்கான மின் இணைப்பைத் துண்டிக்கவும் அவர் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி, மின் இணைப்பைத் துண்டிப்பதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com