பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற செப். 28-க்குள் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் உரிமம் பெற செப். 28ஆம் தேதிக்குள்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் உரிமம் பெற செப். 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி இடங்களைத் தவிர்த்து, தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் பல்வேறு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் படிவம் ஏ.இ-5இல் விண்ணப்பங்களை 5 நகல்கள் பூர்த்தி செய்து ரூ. 2-க்கான நீதிமன்ற கட்டணவில்லை ஒட்டியும். உரிமக்கட்டணமாக ரூ.500-யை அரசுக் கணக்கில் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செல்லான் மற்றும் கடையின் வரைபடம், புகைப்படம், வீட்டுவரி ரசீது, வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் அதன் வீட்டுவரி ரசீது நகல், சொந்தக் கட்டடம் என்றால் வீட்டுவரி ரசீது நகல், நிலைய அலுவலர், தீயணைப்பு-மீட்பு பணித்துறையிடம் இருந்து பெறப்பட்ட தடையின்மைச் சான்று ஆகியவற்றுடன் 5 பிரதிகளுடன் செப். 28ஆம் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 28ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. உரிமம் வழங்கிடக் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பட்டாசு கடை நடத்தும் இடத்தை பொதுமக்களுக்கு சிரமமின்றியும், பாதுகாப்பான இடமாக தேர்வு செய்தும், ஆட்சேபம் இல்லாத இடத்திற்கு மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு உரிமம் பெற்ற நபர்கள் அதே இடத்தில் கடை வாடகை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் செய்தால், ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமத்தையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com