படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் கடனுதவி

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற தமிழக அரசின் சிறப்பான திட்டம் மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற தமிழக அரசின் சிறப்பான திட்டம் மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சம் மிகாமல் இருத்தல்வேண்டும். பொது பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 35 வயது வரையும், சிறப்பு பிரிவினருக்கு (தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர்,மாற்று திறனாளிகள் மற்றும் திருநங்கைகள்) 18 முதல் 45 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
    திட்டத்தின் பங்கு தொகையாக திட்ட மதிப்பீட்டில் 10 விழுக்காடு (10%) பொதுபிரிவினரும், 5 விழுக்காடு (5%) சிறப்பு பிரிவினரும் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடைய, ஆர்வமுடைய படித்த வேலை வாய்ப்பற்ற தொழில் முனைவோர் ‌w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/‌u‌y‌e‌g‌p  என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யப்பட்ட இரண்டு விண்ணப்ப நகல்களுடன் குடும்ப அட்டை, கல்வி சான்று, சாதிச்சான்று, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, மற்றும் உறுதி மொழி பத்திரம் ஆகியவற்றின் நகல்களுடன் மாவட்ட தொழில் மையம் அரியலூர்,என்ற முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.லட்சமிபிரியா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com