உணவுப் பொருள் விற்பனையாளர்கள் உரிமம் பெற டிச.31 வரை கெடு

அரியலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள் விற்பனைச் செய்யும் கடை உரிமையாளர்கள் அனைவரும், உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற டிச.31 ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள் விற்பனைச் செய்யும் கடை உரிமையாளர்கள் அனைவரும், உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற டிச.31 ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அ.ஜெகநாதன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
 அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், மளிகை கடைக்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், டீக்கடைக்காரர்கள், இனிப்பு, கார வகைகள் தயாரிப்பவர்கள், சாலையோர உணவு கடைக்காரர்கள், இறைச்சி வியாபாரிகள், காய்கறி, பழம் விற்பனை செய்வோர், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மற்றும் 
தொழிற்சாலைகளில் சிற்றுண்டி நடத்துபவர்கள் போன்றவர்கள் உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் பதிவு அல்லது உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுமார் 5,800 உணவு வணிக கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் 2,100 கடைகள் மட்டுமே உரிமம் பெற்றுள்ளன.  வரும் 31-ஆம் தேதிக்குள் உரிமம் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து, உரிமத்தை பெறவேண்டும். அப்படி உரிமம் பெறாதவர்கள் மீது ஜனவரி 1 முதல் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நியமன அலுவலர் அலுவலகம், 2-ஆம் தளம், பல்துறை வளாகம், அரியலூர் என்ற முகவரியிலோ அல்லது 04329 223576 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.  
மேலும், பதிவு செய்ய தேவையான விவரங்களை பெற உணவு பாதுகாப்பு அலுவலர்கள்  ஜஸ்டின் அமல்ராஜ்(ஆண்டிமடம் வட்டாரம்)9790053064, வசந்தன்(அரியலூர் வட்டாரம்) 9952116122, சிவக்குமார்(ஜயங்கொண்டம் வட்டாரம்) 9787224473, பொன்ராஜ் (செந்துறை வட்டாரம்)7502221888, வெற்றிவேல்(தா.பழூர் வட்டாரம்) 8682950656, ஸ்டாலின்பிரபு (திருமானூர் வட்டாரம்)9842387798, சசிக்குமார் 9361222722 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com