'அரசு பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் பயின்றால் எளிதில் ஐஏஎஸ் தேர்ச்சி பெறலாம்

அரசுப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் பயின்றால் எளிதில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெறலாம் என்றார் ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிப் பெற்ற குலோத்துங்கன்.

அரசுப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் பயின்றால் எளிதில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெறலாம் என்றார் ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிப் பெற்ற குலோத்துங்கன்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அசோகன்-மல்லிகா. இவரது மகன் குலோத்துங்கன். பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் பயின்றார். பின்னர் அவர் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி., படிப்பும், கோவை வேளாண் கல்லூரியில் எம்.பி.ஏ.,படிப்பு முடித்து விட்டு,தனியார் கல்வி நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாரானார். அண்மையில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ்.தேர்வில் தமிழக அளவில் 10 பேரில் ஒருவராக குலோத்துங்கன் தேர்ச்சிப் பெற்றார்.
இதையடுத்து பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் சார்பில் இவருக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.
அப்போது குலோத்துங்கன் பேசியது: ஐஏஎஸ் அதிகாரிகளின் ஒரு கையெழுத்து இந்திய மக்களின் தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்தது. அதனால்தான் இந்திய ஆட்சிப்பணியை தேர்வு செய்தேன். இந்த பணி மூலம் நமது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்யலாம் என்பதால் விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற்றேன்.
15 ஆண்டுகளுக்கு பிறகு என்னை உருவாக்கிய பொன்பரப்பி பள்ளிக்கு வந்தது பிறந்த வீட்டிற்கு வந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது.ஆங்கில வழி கல்வியை கண்டு அஞ்சாதீர்கள், தமிழ் வழிக்கல்வியில் பயின்று தமிழக அளவில் 10 பேரில் ஒருவராக வெற்றி பெற்றேன்.
ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து தமிழ்வழி கல்வி பயின்று என்னால் ஐஏஎஸ் ஆக முடியும் போது மாணவர்களாகிய உங்களாலும் கண்டிப்பாக முடியும். அரசு பள்ளிகளில் தான் அடிப்படை கல்வி சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. மாணவர் பருவத்திலேயே நீங்கள் என்னவாக வேண்டும் என்று திட்டமிட்டு சிறுசிறு தியாகங்கள் செய்து விடா முயற்சியுடன் உழைத்தால் நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com