செந்துறையில் முந்திரி தொழிற்சாலை அமைக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம்,  செந்துறையில் அரசு சார்பில் முந்திரி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் க.லட்சுமிபிரியாவிடம், சமூக ஆர்வலர் சோழன்குடிகணேசன் அண்மையில் கோரிக்கை மனு அளித்தார்.

அரியலூர் மாவட்டம்,  செந்துறையில் அரசு சார்பில் முந்திரி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் க.லட்சுமிபிரியாவிடம், சமூக ஆர்வலர் சோழன்குடிகணேசன் அண்மையில் கோரிக்கை மனு அளித்தார்.
அவர் அளித்த மனு: செந்துறை வட்டத்தில் அதிக அளவில் முந்திரி சாகுபடி செய்யப்படுவதால் இப்பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என செந்துறை வட்டாரப் பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரையில் நடவடிக்கை இல்லை. எனவே,   கோரிக்கையை ஏற்று செந்துறையில் முந்திரி தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கையை ஆட்சியர் எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல்,  குன்னம் தொகுதிக்குள்பட்ட செந்துறையில் அரசு கலைக் கல்லூரியும், அரசு தொழிற்பயிற்சி நிலையமும் அமைக்க வேண்டும். ஆணைவாரி ஓடையில் குழுமூர் ஏரிக்கும் மழைநீர் வருமாறு தத்தனூர், மாத்தூர்,  செங்கமேடு ஆகிய இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் கணேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com