6 மாத அலைச்சலுக்கு பிறகு கிடைத்தது மாற்றுத்திறனாளிக்கு நலத் திட்ட உதவி

அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், நலத்திட்ட உதவி கேட்டு 7 ஆவது

அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், நலத்திட்ட உதவி கேட்டு 7 ஆவது முறையாக (6 மாதங்கள்) மாவட்ட ஆட்சியர் (பொ) எஸ்.தனசேகரனிடம், வீரப்பன் என்பவர் மனு அளித்தார்.
 உடையார்பாளையம் அருகேயுள்ள  அரங்கோட்டை, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் வீரமுத்து முகன் வீரப்பன் (57). இவருக்கு மனைவி, 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
கடந்த ஆண்டு கூலி வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென இவரது இரண்டு கால்களும் இழுக்கப்பட்டு செயல் இழந்து போனது.
இதனால் அவர் வேலைக்கு செல்லமுடியாமலும், வெளியே செல்லமுடியாமலும் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். தற்போது இவரது மனைவி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் வீரப்பன் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தனக்கு மூன்று சக்கரம் உள்ள சைக்கிள், உதவித் தொகை கேட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இப்படி 6 மாதங்களாக அவர் விண்ணப்பித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் 7 ஆவது முறையாக திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் இவருக்கு பதிலாக அவரது மனைவி மனு அளித்தார்.
இதையடுத்து, தினமணி செய்தியாளர், மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர் உதவி அலுவலர் சரவணன் உதவியுடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன் ஆகியோரை சந்தித்து உடனடியாக, அவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து மாற்றுத்திறனாளி வீரப்பன் தினமணி நாளிதழுக்கு நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com