சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

அரியலூர் மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற

அரியலூர் மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு அண்மையில் நடைபெற்ற விழாவில் பரிசுள் வழங்கப்பட்டன.
தேசிய பசுமைப் படை சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பற்றிய பேச்சு போட்டி, வினாடி வினா, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அண்மையில் வழங்கப்பட்டன.
இதற்காக நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை வகித்தார். தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபிரியன் முன்னிலை வகித்தார். அரியலூர் மாவட்ட வனஅலுவலர் சொர்ணப்பன் கலந்து கொண்டு, வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றுகள் வழங்கினார்.
போட்டிகளில் முதல் பரிசாக ரூ.2 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ஒரு ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.500-ம் மற்றும் ஆறுதல் பரிசாக ரூ.250-ம் வழங்கப்பட்டது.
தேவாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் விழாவை தொகுத்து வழங்கினார். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் வரவேற்றார். நிறைவில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com