வருவாய் தீர்வாயம்: 420 மனுக்களுக்கு தீர்வு

அரியலூர் மாவட்டத்தில் 3 வட்டங்களிலும் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழாண்டுக்கான வருவாய் தீர்வாயத்தில் 420 மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் 3 வட்டங்களிலும் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழாண்டுக்கான வருவாய் தீர்வாயத்தில் 420 மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டது.
உடையார்பாளையம் வட்டத்துக்கு உட்பட்ட ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் எஸ். தனசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 192 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 99 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 67 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பா. ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 231 மனுக்கள் பெறப்பட்டு, 162 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 43 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், உடையார்பாளையம் கோட்டாட்சியர் ப. டினாகுமாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 285 மனுக்கள் பெறப்பட்டு, 159 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டடது. 113 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com