நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை தேவை: சிஜடியு மாநில பொதுச்செயலர்

நீட் தேர்வை ரத்து செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார் சிஐடியு மாநில பொதுச் செயலர் சுகுமாறன்.

நீட் தேர்வை ரத்து செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார் சிஐடியு மாநில பொதுச் செயலர் சுகுமாறன்.
நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா வீட்டுக்கு வியாழக்கிழமை மாலை  சென்ற சிஐடியு மாநில பொதுச் செயலர் சுகுமாறன், அனிதாவின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, அவரின் தந்தை சண்முகம், சகோதர்களுக்கு ஆறுதல் கூறி சிஐடியு சார்பில் ரூ. 1.50 லட்சம் நிதியுதவியையும் அளித்தார்.
பின்னர் அவர் கூறியது: நீட் தேர்வை ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வந்தார். ஆனால்  எடப்பாடி பழனிசாமி அத்தேர்வை ஆதரிக்கும் நிலை கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டும்.
சாதாரணமானவர்கள் மருத்துவராக வேண்டும் என நினைப்பதை இத் தேர்வு  தடுத்து நிறுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக என்றும் சிஐடியு போராடும்.
அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஏமாற்று வேலை. கடந்த 2016 ஜனவரியில் வழங்க வேண்டிய ஊதியத்தை தற்போது வழங்கியுள்ளது. மேலும், அன்றிலிருந்து வழங்க வேண்டிய முன்பணத்தையும் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com