விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி

தமிழ்நாடு அரசு பெரம்பலூர் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை மற்றும் அட்மா திட்டம் சார்பில் தரமான  விதை உற்பத்தி பயிற்சி ஜயங்கொண்டம்

தமிழ்நாடு அரசு பெரம்பலூர் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை மற்றும் அட்மா திட்டம் சார்பில் தரமான  விதை உற்பத்தி பயிற்சி ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு ஆண்டிமடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் காசிநாதன் தலைமை வகித்தார். பெரம்பலூர் விதைச்சான்று உதவி இயக்குநர் பி. பாலகிருஷ்ணன், அரியலூர்  மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநர் பா. மனோகரன், அரியலூர் மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள் க. ராமலிங்கம், சேகர், ஜயங்கொண்டம் வேளாண் உதவி இயக்குநர் கலைச்செல்லி ஆகியோர் தரமான விதை உற்பத்தியின் அவசியம், நெல் மற்றும் பயரு வகை பயிர் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள்,  விதைகள் உற்பத்தி செய்வதற்கான வேளாண் தொழில்நுட்பங்கள்,   விதைச் சான்று விதிகள், விதைச் சட்ட நடைமுறைகள், சான்றட்டை பொறுத்துதலின் முக்கியத்துவம், உயிர் உரங்களின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து பயிற்சியளித்தனர்.
இதில் ஜயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர் வட்டாரங்களைச் சேர்ந்த விதைப்பண்ணை விவசாயிகள் பயிற்சி பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com