பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் பயிற்சி மையங்கள்

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில்,  ஒன்றிய

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில்,  ஒன்றிய அளவிலான பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, ஆதிதிராவிட நல மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017- 18 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்று வரும் மாணவ, மாணவிகள், அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு வசதியாக ஒன்றிய அளவிலான பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்களது பெயரை ww‌w.‌t‌n‌s​c‌h‌o‌o‌l‌s.‌g‌o‌v.‌i‌n  என்னும் இணையதளம் மூலம் அந்தந்த பள்ளிகளிலேயே அக். 26 ஆம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்யும்போது, பயிற்சி பெற விரும்பும் பயிற்சி மையங்களை ஆன் லைனிலேயே தேர்வு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com