மாணவி அனிதா குடும்பத்துக்கு பூவை ஜெகன்மூர்த்தி ரூ. 1 லட்சம் நிதியுதவி

மாணவி அனிதா குடும்பத்துக்கு புரட்சி பாரத கட்சியின் நிறுவனர் பூவை ஜெகன்மூர்த்தி சனிக்கிழமை ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

மாணவி அனிதா குடும்பத்துக்கு புரட்சி பாரத கட்சியின் நிறுவனர் பூவை ஜெகன்மூர்த்தி சனிக்கிழமை ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
நீட் தேர்வால் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காத விரக்தியில் அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த ச. அனிதா செப். 1 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது குடும்பத்துக்கு பல்வேறு கட்சியினர், நடிகர்கள் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புரட்சி பாரத கட்சியின் நிறுவனர் பூவை ஜெகன்மூர்த்தி, அனிதாவின் குடும்பத்தினரை சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மருத்துவப் படிப்பிற்காக நடத்தப்படும் நீட் தேர்வை ரத்துசெய்து, ஏற்கெனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும். கல்வியை மாநில அதிகாரப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். மாணவி அனிதா குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com