வன உயிரின பாதுகாப்பு வார விழா திறனாய்வு போட்டிகள்

வன உயிரின பாதுகாப்பு வார விழாவையொட்டி அரியலூர் அரசு  கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில்

வன உயிரின பாதுகாப்பு வார விழாவையொட்டி அரியலூர் அரசு  கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில்,  மாணவ, மாணவிகளுக்கிடையே திறனாய்வு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொ) மேஜர் ஜி.இருளப்பன் தலைமை வகித்து, தொடக்கி வைத்தார். அரியலூர் மாவட்ட வனச்சரக அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். காடுகளையும், காட்டு விலங்குகளையும் பாதுகாப்பதன் அவசியம் எனும் தலைப்பில் கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இயற்பியல் துறை பேராசிரியர் ம.ராசமூர்த்தி, தமிழ்த்துறை பேராசிரியர்கள் த. மரகதம், பெ.கலைச்செல்வன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.  முதல் மூன்று இடங்களைப்  பிடிக்கும் மாணவ,மாணவிகள் சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில்  அக்.10 ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் வெ.கருணாகரன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com