அரியலூர், பெரம்பலூரில் ஆகஸ்ட் 18 மின் தடை

அரியலூர், தேளூர் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.18) மின்சாரம் இருக்காது.

அரியலூர், தேளூர் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.18) மின்சாரம் இருக்காது.
துணை மின்நிலைய பராமரிப்பு பணியால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் அரியலூர் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி, இராஜீவ்நகர் மற்றும் மணக்குடி, குறிச்சி நத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, தாமரைக்குளம், பொய்யாதநல்லூர், கோவிந்தபுரம், ஓ.கூத்தூர், ஒட்டக்கோவில், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, வி.கைகாட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி, தேளுர், நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக்கர்பாளையம், பெரியதிருக்கோணம், செட்டித்திருக்கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார்பேட்டை, ஆச்சனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பி. சாமிதுரை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.
பெரம்பலூர்.... பெரம்பலூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 18) மின்சாரம் இருக்காது.
பெரம்பலூர் தானியங்கி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின்சாரம் பெறும் பெரம்பலூர் நகர்ப் பகுதிகளான பழைய, புறநகர் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்கு சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை, அண்ணா நகர், கே.கே. நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், பாலம்பாடி மற்றும் கிராமிய பகுதிகளான பீல்வாடி, அசூர், சிறுகுடல், சித்தளி, அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிகாடு, இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, எளம்பலூர் மற்றும் சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com