அரியலூர் தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல்

அரியலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரிக்கு இணையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூ. கட்சி மாநாட்டில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரிக்கு இணையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூ. கட்சி மாநாட்டில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரில் இந்திய கம்யூ. கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற 11 ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: 
அரியலூர் வழியாக கும்பகோணம் - சேலம் இணைப்பு மற்றும் தஞ்சையில் இருந்து திருமானூர், அரியலூர் இணைப்பு புதிய ரயில் பாதை திட்டத்தை கொண்டு வர வேண்டும். அரியலூரில் புதை சாக்கடை திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். திருச்சி - லால்குடி மற்றும் சேலம் -விருத்தாச்சலம் பயணிகள் ரயிலை அரியலூர் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கயர்லாபாத்,கோனேரி, ராயபுரம், வைப்பம் ஆகிய கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அரியலூர் நகரில் ஷேர் ஆட்டோக்களை இயக்கிட அதிகாரிகள் அனுமதி அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டு கொடியை அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி. மணிவாசகம் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் உலகநாதன், மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். துணைச் செயலாளர் டி.தண்டபாணி, திருமானூர் ஒன்றியச் செயலாளர் ஜி. ஆறுமுகம், தா.பழூர் ஒன்றியச் செயலாளர் சா. அபிமன்னன், ஜயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் சி.ராமநாதன்,விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் இரா.தெய்வசிகாமணி ஆகியோர் பங்கேற்று பேசினர். பின்னர் புதிய ஒன்றிய குழு உறுப்பினர்கள்-நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com