மீனாட்சி ராமசாமி கல்லூரியில் பட்டமளிப்பு

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி உடற்கல்வியியல் கல்லூரியில் 7-வது  பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி உடற்கல்வியியல் கல்லூரியில் 7-வது  பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். 
இணைச்செயலர் கமல்பாபு, இயக்குநர் ராஜமாணிக்கம், முதல்வர் தங்கபிச்சையப்பா, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசியது:
இன்றைய இந்தியாவில் உடற்கல்வியியல் சார்ந்த ஆராய்ச்சிகள் அதிகம் தேவைப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முதலாக உடற்கல்விக்கென்றே பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது. உடற்கல்வியியல் படிக்கும் மாணவர்கள் உடற்கல்வியியல் சார்ந்த உளவியலாளராக உருவாக வேண்டும் என்றார்.
துணை முதல்வர் அன்பழகன், துறைத் தலைவர் திருமுருகன், பேராசிரியர், பேராசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com