போலீஸார்-பொதுமக்கள் நல்லுறவுப் போட்டி

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் காவல் துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவுச் சங்கம் சார்பில்  வியாழன், வெள்ளிகிழமைகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் காவல் துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவுச் சங்கம் சார்பில்  வியாழன், வெள்ளிகிழமைகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் கென்னடி போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.  
ஆண்களுக்கு கைப்பந்து, இறகுப் பந்து பெண்களுக்கு இசை நாற்காலி, கரண்டி எலுமிச்சை போட்டி, கோலம் போடுதல், சிறுவர்களுக்கு இசை நாற்காலி  உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெள்ளிக்கிழமை மாலை பரிசளிப்பு நடைபெற்றது. 
போட்டி நடுவராக உடற்கல்வி ஆசிரியர் கண்ணதாசன் செயல்பட்டார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முடியழகன் உள்ளிட்டோர் வாழ்த்தினர், பரிசு, சான்றிதழ்களை ஜயக்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கென்னடி வழங்கிப் பாராட்டினார்.உதவி ஆய்வாளர் ராஜீவ்காந்தி வரவேற்க,  சிறப்பு உதவி ஆய்வாளர் வளையாபதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com