உரிமமின்றி விதைகள் விநியோகித்தால் கடும் நடவடிக்கை

உரிமம் பெறாôமல் விதைகள் விநியோகம் செய்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் ந. கண்ணன்.

உரிமம் பெறாôமல் விதைகள் விநியோகம் செய்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் ந. கண்ணன்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள விதை விற்பனை நிலையங்களில் அவர் சனிக்கிழமை ஆய்வு செய்தபோது தெரிவித்தது:
அரியலூர் மாவட்டத்தில் விதை விற்போர் அரசு உரிமம் பெற்ற பின்னரே விதை விற்க வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் விதைகள் விற்றால் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விதை பைகளில் உள்ள விவர அட்டையில் அட்டைஎண்,குவியல் எண், பயிர், ரகம், காலாவதி நாள் உட்பட 14 விவரங்கள் இருக்கவேண்டும். அட்டையில் ஏதேனும் தவறு இருந்தால் விற்கக் கூடாது. அரசு உரிமின்றி விதை விற்பனையில் ஈடுபடுவோர் குறித்து திருச்சி மன்னார்புரத்தில் இயங்கிவரும் விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புதிய விதை விநியோக உரிமம் பெற விரும்புவோர் விண்ணப்பம் அ- வை பூர்த்தி செய்து அதனுடன் சொந்த இடம் எனில் வரி செலுத்திய ரசீது அல்லது வாடகை இடம் எனில் மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்த பத்திரம், ஆதார் அட்டையின் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, கடையின் வரைபடம் மற்றும் ரூ 1,000 பணம் செலுத்திய கருவூல ரசீது ஆகிய ஆவணங்களுடம் மேற்கண்ட அலுவலகத்தில் விண்ணபிக்கலாம் என்றார். இந்த ஆய்வின்போது,அரியலூர் விதை ஆய்வாளர்கள் சேகர்,மோகன்தாஸ்,பிரகாஷ்,சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com