ராம்கோ சிமென்ட் சார்பில் வளர்ச்சித் திட்டப் பணி

அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தி. ராம்கோ சிமென்ட் சார்பில் ரூ. 26 லட்சத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டங்கள் வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டன.

அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தி. ராம்கோ சிமென்ட் சார்பில் ரூ. 26 லட்சத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டங்கள் வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டன.
அரியலூர் ஊராட்சி ஒன்றியம்,மணக்கால் ஊராட்சிக்குட்பட்ட நல்லாம்பத்தை கிராமத்தில் தி. ராம்கோ சிமென்ட்ஸ் லிமிடெட்,சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 15 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறுகள்.
அரியலூர் ரயில் நிலையம் அருகேயுள்ள ஆர்.சி. நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளியில் ரூ.3 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சத்துணவுக் கூடம் ஆகியவை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆலையின் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் தலைவர் சி. ரவிச்சந்திரன் பங்கேற்று திறந்து வைத்தார்.
மூத்த பொது மேலாளர் (கணக்கு) ஆர்.வெங்கட்ராமன், மனித வள மூத்த துணைப் பொது மேலாளர்அ. ஜான்சன் ஆன்டனிலியோ,மூத்த துணைப் பொது மேலாளர்(சுரங்கம்)சு. மகேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகள், கிராம மக்கள், ஆலை நிர்வாக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மரம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடரந்து அமீனாபாத் கிராமத்திலுள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி, வம்பரான் குட்டை ஆகிய மூன்று ரூ.10 லட்சம் மதிப்பில் தூர்வாருதல் மற்றும் ஏரிக்கரையை பலப்படுத்தல் பணிகளும் தொடக்கி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com