அரியலூரில் மக்கள் மேடை அமைப்பு ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே இந்திய கம்யூ. கட்சியின் தமிழக மக்கள் மேடை அமைப்பின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே இந்திய கம்யூ. கட்சியின் தமிழக மக்கள் மேடை அமைப்பின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வு, மீத்தேன் திட்டம், ஷெல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி உரிமையை மீட்க வலியுறுத்தியும், என்எல்சி இந்தியா,
சேலம் ஸ்டீல் பிளான்ட் தனியார்மயம், ஜிஎஸ்டி, எரிபொருள் விலை உயர்வு, விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றைக் கண்டித்தும்,
காவிரி மேலாண்மை ஆணையத்தை முழு அதிகாரத்துடன் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி நிர்வாகி ஜி.ராசேந்திரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி.தண்டபாணி பங்கேற்று பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் இரா.தெய்வசிகாமணி, துணைச் செயலர் ஜி.ஆறுமுகம்,
விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் சி.ராமநாதன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றியச் செயலர் ஆ.பெரியசாமி, தா.பழூர் ஒன்றியச் செயலர் எஸ்.அபிமன்னன் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர், மாதர் சங்கத்தினர், பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com