பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உத்சவம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உத்சவம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கருவூர் ஸ்ரீமகா அபிஷேக குழு சார்பில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி அம்மன், சௌந்தரநாயகி அம்மனுக்கு பசுபதீஸ்வரர் கோயில் நால்வர் அரங்கில் 19-ஆவது ஆண்டு ஆடித் திருக்கல்யாண உத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை கணபதி வழிபாடு, ராஜகோபுரத்திற்கு பிரம்மாண்ட மாலை சாத்துதல், கரூர் பெருமாள் கோயிலுக்கு பெண் வீட்டு சீர்தட்டு அழைக்கப் புறப்படுதல், மாப்பிள்ளை அழைப்பு, மாப்பிள்ளை பெண் வீடு புகுதல், சீர்தட்டு அழைத்தல், சிறப்பு உபசரணைகள், மகாதீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை பசுபதீஸ்ரவர், அலங்காரவள்ளி, சௌந்தரநாயகி உத்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு நால்வர் அரங்கில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, அம்மன் இருவருக்கும் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் உத்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மொய் வழங்கி, திருமண விருந்தில் பங்கேற்றனர். மேலும், பல்வேறு இசைவாத்தியங்கள் முழங்க சிறப்பு நடன நிகழ்ச்சிகள், தேவார பன்னிசையோடு சுவாமியோடு, அம்மன் இருவரும் திருமண கோலத்தில் (பட்டினபிரவேசம்) திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com