கிடப்பில் போடப்பட்ட பெத்தாச்சி வளைவு புதுப்பிக்கும் பணி: விரைவில் முடிக்க திருக்குறள் பேரவை வலியுறுத்தல்

கிடப்பில் போடப்பட்ட பெத்தாச்சி வளைவுப் பணியை மீண்டும் தொடங்கி விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை கரூர் திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

கிடப்பில் போடப்பட்ட பெத்தாச்சி வளைவுப் பணியை மீண்டும் தொடங்கி விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை கரூர் திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
 கரூர் நகரின் தொன்மையை பறைசாற்றும் வகையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கொண்ட நினைவுச் சின்னமாக பெத்தாச்சி வளைவு உள்ளது.  பிரிட்டிஷ் ஆட்சியில் கரூருக்கு வெலிங்டன் பிரபு வருகைக்காக கட்டப்பட்டது. பின்னர் அவரது வருகை ரத்தானதையடுத்து அவரது மனைவி வருகை தந்து சிறப்பித்ததால் அவரது பெயரையே அந்த வளைவுத்தூணில் பொறிக்கப்பட்டது.  இந்த வளைவுத்தூணை 1895--1905-ல் கரூர் நகராட்சித்தலைவராக இருந்த ஆண்டிபட்டிக்கோட்டை ஜமீன் என்றழைக்கப்பட்ட பெத்தாச்சி என்பவர் கட்டியதால் அவரது பெயரையே இந்த வளைவுத்தூணுக்கு பெயர் சூட்டப்பட்டது.  சுமார் 120 ஆண்டுகளாக கரூர் நகரின் நினைவுத்தூணாக இருக்கும் இந்த வளைவு நகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வளைவு அண்மையில் சீரமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் இறங்கியது.  ஆனால் பணிகள் துவங்கப்பட்ட சில நாட்களில் நிறுத்தப்பட்டன. இப்போது சாரம் மட்டும் கட்டப்பட்ட நிலையில் மட்டம் காட்சியளிக்கிறது.  எனவே பணிகளை விரைந்து முடித்து கரூர் நகரின் பாரம்பரிய சின்னத்தை காப்பாற்ற வேண்டும் என கரூர் திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனர் மேலை.பழநியப்பன் கூறுகையில்,  கரூர் நகராட்சியின் முதல் தலைவராக இருந்தவர் பெத்தாச்சி செட்டியார்.  ஆண்டிபட்டிக்கோட்டை ஜமீனாக இருந்த அவர் கரூர் நகர மக்களுக்காக பல்வேறு சேவைகளை செய்துள்ளார். அவரது நினைவாக உள்ள இந்த பெத்தாச்சி வளைவை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் அதனைத் தொடர்ந்து பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com