போலீஸாரை கண்டித்து   ஆட்சியரகத்தில் முதியவர் நூதனப்போராட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள மின்கம்பத்தில் தனக்குத்தானே இரும்புச் சங்கிலியால் பூட்டிக்கொண்டு முதியவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள மின்கம்பத்தில் தனக்குத்தானே இரும்புச் சங்கிலியால் பூட்டிக்கொண்டு முதியவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பள்ளபட்டி கேர் நகரைச் சேர்ந்தவர் ரகமத்துல்லா(65).  இரும்பு பட்டறைத் தொழிலாளி. இவரது மகள் உமரசாபானு (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சாகுல்அமீது மகன் முகமதுபாரூக் (27) என்பவருக்கும் கடந்த 12.2.2017-இல் திருமணம் நடைபெற்றது.  முகமது பாரூக் சென்னையில் உள்ள காலணி விற்பனை செய்யும் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
  இந்நிலையில் உமராசுபானுவிடம் முகமது பாரூக் 6 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் வாங்கி வா எனக்கூறி அடிக்கடி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கணவரிடம் இருந்து கோபித்துக்கொண்டு கடந்த ஒரு மாதத்தற்கு முன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.
இந்நிலையில் கடந்த 26-ம்தேதி உமரசாபானு வீட்டிற்கு முகமதுபாரூக், அவரது தந்தை சாகுல்அமீது, தாய்  ரபியாபீவி, தம்பி அராபத்அலி ஆகியோர் சென்று உமரசாபானுவின் தந்தை ரகமத்துல்லாவிடம் மகளை அனுப்புமாறு கேட்டுள்ளனர். அப்போது அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முகமதுபாரூக் உள்பட் 4 பேரும் சேர்ந்து ரகமத்துல்லா, மகள் உமரசாபானு ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸில் மருமகன் உள்ளிட்ட நான்கு பேர்மீதும் நடவடிக்கை கோரி ரகமத்துல்லா புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். மேலும் உமரசாபானுவும் தன்னிடம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர்,
 மாமனார், மாமியார் மீது கரூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரகமத்துல்லா திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த அவர் திடீரென கொண்டு வந்திருந்த சங்கிலியால் அங்கிருந்த மின்கம்பத்தில் தனக்குத்தானே பூட்டுபோட்டுக்கொண்டார்.
 பின்னர் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் மீதும், தன்னை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கமிட்டார். இதையடுத்து  அவரை போலீஸார் ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர். பின்னர் ஆட்சியர் உடனே இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com