புத்தக வாசிப்பை அதிகரிக்க மாணவர்களுக்கு திறனாய்வுப் போட்டிகள்

புத்தக வாசிப்பை அதிகரிக்கும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திறனாய்வுப் போட்டிகள் கரூரில் புதன்கிழமை நடைபெற்றது.

புத்தக வாசிப்பை அதிகரிக்கும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திறனாய்வுப் போட்டிகள் கரூரில் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சார்பில், கரூரில் புத்தகத் திருவிழா வரும் ஜூலை 21 முதல் 29 வரை நடைபெறவுள்ளது.
இதையொட்டி, பள்ளி மாணவர்களிடையே வாசிப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில், மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், கரூர் நகரம், ஒன்றியம் மற்றும் தோகைமலை, குளித்தலை, கடவூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, தாந்தோணிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் முனைவர் சொ. ராமசுப்ரமணியம் தலைமை வகித்து வாசித்தல் குறித்து பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் சண்முகவடிவு வரவேற்றார். வரவேற்புக் குழு கௌரவத் தலைவர் பிடிகோச். தங்கராசு, அமைப்பாளர் து.ரா. பெரியதம்பி, அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர்கள் காமராஜ், பழனியப்பன் ஆகியோர் திறனாய்வுத் தேர்வை தொடக்கி வைத்தனர்.
சங்க மாவட்டச் செயலாளர் ஜான்பாட்ஷா நன்றி கூறினார். இதில், மாவட்ட நிர்வாகிகள் பிரேம்குமார், ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com