மகளிருக்கு மென்திறன், தையல் பயிற்சி முகாம்

கரூரில் மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் மகளிருக்கு மென்திறன் மற்றும் மேம்பட்ட தையல் பயிற்சி கடந்த 8 நாட்களாக அளிக்கப்பட்டது.

கரூரில் மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் மகளிருக்கு மென்திறன் மற்றும் மேம்பட்ட தையல் பயிற்சி கடந்த 8 நாட்களாக அளிக்கப்பட்டது.
கலைமகள் சமுதாயக் கல்லூரியில் முதல் 3 நாட்கள் நடைபெற்ற தையல் பயிற்சியை, புதுதில்லி மெத்தெட்ஸ் அப்பெரல்கன்ஸல்டன்ஸி நிறுவனப் பயிற்றுநர் மகேஷ் குமாரும், 5 நாட்கள் மென்திறன் பயிற்சியை வேலூர் வி.ஐ.டி பல்கலைகழக சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர்கள் டன்ஸ்டன் ராஜ்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் அளித்தனர்.  
இப்பயிற்சியில் தையல்பயிற்சி நிலையத்தின் தரத்தை மேம்படுத்துதல், திறனை வளர்த்தல்,கணனிப் பயன்பாடு, உறவு மேம்பாடு,நேர மேலாண்மை,சுயமுன்னேற்றம் தொடர்பான கருத்துகள் வழங்கப்பட்டன. இதில்,சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த   தையல் துறையைச் சேர்ந்த பெண்கள் 25 பேர் பயிற்சி பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com