கரூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

கரூர் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை அலங்கார

கரூர் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை அலங்கார வண்டியில் கோயிலுக்கு எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  
மக்களை காக்கும் தெய்வமாகவும், மழை வேண்டி வணங்கினால் மும்மாரி(மழை) தரும் தெய்வமாகவும் கரூர் மாரியம்மன் போற்றப்படுகிறார்.
ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் கரூர் மாரியம்மன் வைகாசி உற்சவ திருவிழா கடந்த 14-ஆம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதையொட்டி கோயில் முன் நடப்பட்ட கம்பத்திற்கு பக்தர்கள் நாள்தோறும் புனிதநீர் ஊற்றி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் புஷ்பவிமானம், கருட வாகனம், மயில் வாகனம், வேப்ப மர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்பினர் சார்பில் அலங்கார வண்டியில் பூக்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக மேள தாளம் முழங்க சுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சுவாமி பூக்கள் சாற்றி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதல், 29-ஆம் தேதி திருத்தேரோட்டம், 31-ஆம் தேதி கம்பம் பிடுங்கப்பட்டு ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
மேலும் விழாவில் பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், அக்னிச்சட்டி, அலகு, காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com