ஜமீன் ஆலமரத்துப்பட்டியில் அம்மா திட்டம் முகாம்: 17 மனுக்களுக்குத் தீர்வு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஜமீன் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்டம் முகாமில் 17 மனுக்களுக்கு உடனடி தீர்வு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஜமீன் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்டம் முகாமில் 17 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
அரவக்குறிச்சி மண்டலத் துணை வட்டாட்சியர் யசோதா முகாமுக்குத் தலைமை வகித்தார். புதிய குடும்ப அட்டை கோருதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், முதியோர் உதவித்தொகை கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 20 பேர் மனுக்களை அளித்தனர்.
இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட மண்டலத் துணை வட்டாட்சியர் அவற்றின் மீது விசாரணை நடத்தி, 17 மனுக்களுக்குத் தீர்வு கண்டு அதற்குரிய உத்தரவை வழங்கினார். பள்ளப்பட்டி வருவாய் ஆய்வாளர் ரவிவர்மன், அரசு மருத்துவ அலுவலர் சுந்தர ராஜன்,கால்நடை உதவி மருத்துவர் சுமதி உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் முகாமில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com