அரவக்குறிச்சி அருகே  ஆலைக்கழிவுகளை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள புங்கம்பாடி கிராம ஊராட்சிக்குட்பட்ட பால்வார்பட்டி தேரப்பாடி பகுதியில்  டிஎன்பிஎல் ஆலையின்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள புங்கம்பாடி கிராம ஊராட்சிக்குட்பட்ட பால்வார்பட்டி தேரப்பாடி பகுதியில்  டிஎன்பிஎல் ஆலையின் ரசாயனக்  கழிவுகளைக் கொட்ட அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரவக்குறிச்சி அருகே உள்ள புங்கம்பாடி கிராம ஊராட்சிக்குட்பட்ட பால்வார்பட்டி தேரப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக டிஎன்பிஎல் ஆலையின் கழிவுகள் ஒப்பந்ததாரர்கள் வெளியே எடுத்துவந்து சாலையோரம்  உள்ள தோட்டக் காடுகளில் கொட்டி வந்துள்ளனர். டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள இந்தக் கழிவுகளில் இருந்து வரும் நெடிய காற்றினால் அப்பகுதியினருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அப்பகுதியின் மதிமுக ஆபத்து மீட்புப்பணிகள் மாநிலச் செயலாளர் கலையரசன் மேலும் கூறியது:  
கடந்த இரு நாளில் சுமார் 800 டன் ஆலைக்கழிவுகள் இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளது.  இந்தக் கழிவுகளில் இருந்து வரும் நச்சுக்காற்றினால் சுவாசிக்க முடிவதில்லை.  இங்கு ஏராளமானோர் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். இங்கு கொட்டப்படும் நச்சுக்கழிவுகளால் கால்நடைகள் இறக்க நேரிடும் வாய்ப்புள்ளது.
மேலும், மனிதர்களுக்கும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனே மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
இல்லையேல் பொதுமக்கள், விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com