அறிவியல் போட்டியில் அரசுப் பள்ளிக்கு பரிசு

குறுவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் கருப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு முதல் பரிசு கிடைத்தது.

குறுவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் கருப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு முதல் பரிசு கிடைத்தது.
 தாந்தோணி வட்டாரத்திற்குட்பட்ட குறுவள மையங்களுக்கிடையேயான அறிவியல் கண்காட்சி போட்டிகள் சுக்காலியூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தாந்தோணி வட்டாரத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியை ஆசிரியர் பயிற்றுநர் வரதராஜன் துவக்கி வைத்தார்.
இதில் மாணவ, மாணவிகள் நீர்வள பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம், வன மேலாண்மை, போக்குவரத்து தகவல் தொழில்நுட்பங்கள், கணித மேம்பாடு ஆகிய தலைப்புகளில் அறிவியல் படைப்புகளை படைத்திருந்தனர். போட்டியில் கருப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி பெ.ஹரிணியின்இயற்கைவடிகட்டி படைப்புக்கு முதல் பரிசு கிடைத்தது.
முதல் பரிசை பள்ளியின் தலைமை ஆசிரியை இரா.ஆ. மரகதமிடம் ஆசிரியர் பயிற்றுநர் வரதராஜன் காண்பித்தார். நிகழ்ச்சியில் பள்ளித்தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com