எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ரூ.88.48 கோடியில் உதவி: முதல்வர் வழங்கினார்

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 22,282 பயனாளிகளுக்கு ரூ. 88.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்.

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 22,282 பயனாளிகளுக்கு ரூ. 88.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்.
வருவாய்த் துறை சார்பில் 5,975 பேருக்கு ரூ. 34.24 கோடியிலும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 2639 பேருக்கு  ரூ. 9.76 கோடியிலும்,  மகளிர் திட்டம் சார்பில் 2,000 பேருக்கு ரூ. 6.59 கோடியிலும்,  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 720 பேருக்கு ரூ. 15.12 கோடியிலும் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 1000 பேருக்கு ரூ. 2.4 கோடியிலும்,  நில அளவைத் துறை சார்பில் 93 பேருக்கு ஆன்லைன் உட்பிரிவு பட்டா என பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 22,282 பயனாளிகளுக்கு ரூ. 88.48 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சாதனைத் திட்டங்களைப் பட்டியலிட்ட முதல்வர்:
முன்னதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசும்போது,  கரூர் மாவட்டத்துக்கு கடந்த
ஆறு ஆண்டுகளில் அளிக்கப்பட்ட சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டார்.அவர் பேசுகையில்,  கரூர் மாவட்டத்தில் ரூ. 61.80 கோடியில் 37,486 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கிராம மாணவர்களுக்கும் விசால  அறிவு கிடைக்கும் என்ற உயரிய நோக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.  இதேபோல ரூ. 12.97 கோடியில் 37,694 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களும், , முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 25,653 விவசாயிகளுக்கு ரூ. 15.7 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது.  ஏழை எளிய குடும்பங்களுக்கு ரூ.87.4 கோடியில்  சூரிய மின்சக்தியுடன் கூடிய 5,232 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.  தாய் திட்டத்தில் 157 ஊராட்சிகளில் 2,174 குக்கிராமங்களில் ரூ. 65.27 கோடியில் 3,849 பணிகள் நடந்துள்ளன.
 சிறு, குறு விவசாயிகளின் ரூ.129.28 கோடி கடன் தள்ளுபடி,  மகசூல் பாதித்த 34,058 விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக ரூ.14.78 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனையோ திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார் முதல்வர்.
விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கரூர் மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன்,  மாவட்டத் துணைச் செயலர் பசுவை சிவசாமி,  நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன்,  முன்னாள் கரூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ். திருவிகா,  மாவட்ட இளைஞரணிச் செயலர் விசிகே. ஜெயராஜ்,  இளம்பெண், இளைஞர் பாசறைச் செயலர் விவி. செந்தில்நாதன், கரூர் ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன்,  முன்னாள் மாவட்ட மாணவரணி செயலர் தானேஷ் என்கிற முத்துக்குமார், நகர இளைஞரணிச் செயலர் சேரன்பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com